Enable Javscript for better performance
"மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும்'- Dinamani

சுடச்சுட

    

    "மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும்'

    By DIN  |   Published on : 28th March 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subramaniyansamy

    மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.  
    சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  அமமுகவிற்கு பொதுச் சின்னம் வழங்குவது குறித்து  தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.  
    மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் வெற்றி பெறுவார். 
    ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவில்லை. 
    இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடினேன். ஆனால்,  அப்போதைய நீதிபதி சதாசிவம் இயந்திரத்தில் உள்ள குறைபாடுகளைக் கூறுங்கள் மாற்றியமைக்கலாம் என்றார். மேலும் பழைய முறையில் வாக்குப்பதிவு நடந்தால் தேர்தல் முடிவு தெரிய 2 நாள்கள் கூட ஆகும்.   
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் மூலம் ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை  எப்படி தரப்போகிறார் என்ற திட்ட அறிக்கை இல்லை.
     மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது குறித்த கேள்விக்கு, இதுதொடர்பாக 2 முறை மத்திய அரசிடம் வலியுறுத்தினேன். 
    கடந்த 2001இல் மத்திய அமைச்சராக சரத் யாதவ் இருந்த போது விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 
    பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுஃல் பட்டேல் விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றபோது,  அப்போதைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதை  தடுத்தார் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai