Enable Javscript for better performance
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 28th March 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
    மதுரை காக்காதோப்பில் மருத்துவர் காந்தி என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு பெத்தானியாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பகுதி நேர வேலைக்கு சேர்ந்தார். சில நாள்களில் மருத்துவர் காந்தி, அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.   இதனால் மாணவி வேலையை விட்டு நின்று விட்டார். இதே காரணத்திற்காக மருத்துவமனையில் பணிபுரிந்த இரு பெண்கள் வேலையை விட்டு நின்றுள்ளனர். 
    இதனிடையே மாணவிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, அந்த மாணவி மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மருத்துவர் காந்தி மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai