Enable Javscript for better performance
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 67.70 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 67.70 லட்சம்

    By DIN  |   Published on : 28th March 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல்களில்  பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.67.70 லட்சம் இருந்தது.
    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அலுவலர்கள் முன்னிலையில் புதன்கிழமை கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் உபகோயில்கள் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் கோயில் உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூ.67.70 லட்சம் இருந்தது. 
    மேலும் தங்க நகைகள் 574 கிராம்,   வெள்ளி  530 கிராம் மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை போன்ற அயல்நாட்டைச் சேர்ந்த 305  கரன்சி நோட்டுகள் இருந்தன.
     உதவிஆணையர்கள் மு.ராமசாமி , ஜெ.முல்லை, கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர் பேரவை அமைப்பினர்,  ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் வங்கி  பணியாளர்கள் என 334 பேர் காணிக்கை எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai