Enable Javscript for better performance
"முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்'- Dinamani

சுடச்சுட

    

    "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்'

    By DIN  |   Published on : 28th March 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவோம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பிரசாரம் செய்தார்.
    மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் அழகர்கோயிலில் புதன்கிழமை மாலை வழிபாடு செய்துவிட்டு, மேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்துப் பேசியது: 
    அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது. இத்தேர்தல் வெற்றிக்குப் பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொள்வோம். இதன்மூலம் இப்பகுதியில் 3 போக விவசாயத்தை உறுதி செய்வோம்  என்றார்.      
    வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் பேசியது: மாணவ, மாணவியர்கள் படிப்புக்கு ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அதிமுக அரசு செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்விக்கடன், வேளாண் கடன்களை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
    அழகர்கோவில், வலையபட்டி, அழகாபுரி, செட்டியார்பட்டி, அரிட்டாபட்டி, சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, முசுண்டகிரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது. 
    இதில் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா , மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை மாவட்ட அம்மா பேரவைச் செயலர் க.தமிழரசன் , மேலூர் ஒன்றியச் செயலர் பொன்னுச்சாமி, நகரச் செயலர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மேலூர் மந்தைத் திடலில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை புதன்கிழமை காலை மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் திறந்து வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai