Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே கு.நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு  பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    பேரணியை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சரஸ்வதி தலைமையேற்று தொடக்கி வைத்தார்.
    பேரணியில் மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனர். இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்  மண்டல  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.அன்பழகன், வி.ராம்குமார், டி.சோலை குரும்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 சதவீதம் வாக்களிப்பது  குறித்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோலப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.முத்தையா வரவேற்றார். ஊராட்சி செயலர் பி.சிவபாண்டி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai