Enable Javscript for better performance
பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரி மனு:பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீத- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரி மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 29th March 2019 07:13 AM  |   Last Updated : 29th March 2019 07:13 AM  |  அ+அ அ-  |  

    அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை (என்சிசி)  பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினமும் நடத்தக் கோரிய வழக்கில்  பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
    கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடுவைச் சேர்ந்த ஹோமர் லால்  தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது இளைஞர்களால் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இதற்கு கல்வி நிலையங்களில் பாடங்களை மட்டும் மனப்பாடம் செய்ய வைப்பதும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்காததும் தான் காரணம். எனவே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் என்சிசி பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை கட்டாயமாக்கினால் மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொள்வர். மேலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் நீங்கி நன்றாக கல்வி கற்கும் மனநிலை உருவாகும். 
    எனவே தனியார் பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்களுக்கும் என்சிசி பயிற்சி பெறுவதைக் கட்டாயமாக்கிடவும், நன்னெறி வகுப்பை தினமும் நடத்தவும் நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் யாரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ இயலாது. 
    எனவே மாணவர்களுக்கு, பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நன்னெறிகள் குறித்து கற்றுத்தருவது அவசியம். தற்போதைய சுழலில் இதற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.
     அதனால் இந்த வழக்கில்  சிபிஎஸ்இ  மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை  நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிடுவதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp