சிஇஓஏ பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 01st May 2019 07:29 AM | Last Updated : 01st May 2019 07:29 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிஇஓஏ பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இப் பள்ளி மாணவி ஏ.சுவேதா 500-க்கு 493 மதிப்பெண்களும், ஏ.எம்.ஹரீஷ் பாண்டி 490 மதிப்பெண்களும், ஏ.மனோரஞ்சன் 489 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். கணிதத்தில் 3 பேர், சமூக அறிவியலில் 7 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 25 மாணவர்கள் 500-க்கு 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளித் தலைவர் ராஜா கிளைமாக்ஸ், இணைத் தலைவர் இ.சாமி, துணைத் தலைவர்கள் விக்டர் தனராஜ், செளந்தரபாண்டி, ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், பள்ளி முதல்வர்கள் ஹேமா, நசீம் பானு மற்றும் கோமுலதா ஆகியோர் பாராட்டினர்.