முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்
By DIN | Published On : 15th May 2019 06:41 AM | Last Updated : 15th May 2019 06:41 AM | அ+அ அ- |

மதுரை நரிமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் பெண் உயிரிழந்ததாக போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(38). இவருடைய சகோதரியான, நிலையூரைச் சேர்ந்த பஞ்சவர்ணம்(39), கடந்த 3 மாதங்களாக உடல்நலமில்லாமல் மதுரை நரிமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் பஞ்சவர்ணத்திற்கு மீண்டும் உடல்நலமில்லாமல் போனதால் திங்கள்கிழமை காலை அதேமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் சிகிச்சையில் இருந்த அவர்சிறிதுநேரத்தில் சுயநினைவை இழந்தார்.
அதன்பின்னர் மாலை பஞ்சவர்ணம் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தனது சகோதரிக்கு தவறான சிகிச்சையளித்ததால் தான் அவர் இறந்துவிட்டார் என, மாரியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.