முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: மதுரையில் மதுக்கடைகள் அடைப்பு
By DIN | Published On : 15th May 2019 06:41 AM | Last Updated : 15th May 2019 06:41 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை யொட்டி மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மே 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 23-ஆம் தேதியும் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், எப்எல் 2 முதல் எப்எல்11 வரை(எப்எல் 6 நீங்கலாக) மூடப்பட்டு இருக்கும். மேற்கண்ட நாள்களில் சில்லரை மது விற்பனையும் நடைபெறாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.