திருப்பரங்குன்றம் பத்ர காளியம்மன் கோயில் உற்சவ விழா
By DIN | Published On : 16th May 2019 07:17 AM | Last Updated : 16th May 2019 07:17 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ர காளியம்மன் கோயில் 27-ஆம் ஆண்டு உற்சவ விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோயில் கோயில் உற்சவ விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
விழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் வாசலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில் சிறப்பு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பி.சுடலைமணி, பி.அருணாச்சலம், என்.காசிராஜன், காமராஜ் உள்ளிட்ட கோயில் நிர்வாகள் செய்திருந்தனர்.