முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கணவரின் உடல் உறுப்புகள் தானம் தலைமைக் காவலருக்கு பாராட்டு
By DIN | Published On : 18th May 2019 06:52 AM | Last Updated : 18th May 2019 06:52 AM | அ+அ அ- |

வாகன விபத்தில் உயிரிழந்த கணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெண் தலைமைக் காவலருக்கு மதுரை எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் முத்து. இவரது கணவர் முத்துச்செல்வம் மார்ச் மாதம் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், முத்துச்செல்வம் திடீரென்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெண் தலைமைக் காவலர் முத்து முன் வந்தார்.
அதன்படி, முத்துசெல்வத்தின் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இச்செயலைப் பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணிவண்ணன், பாராட்டுச் சான்றிதழை புதன்கிழமை வழங்கினார்.