முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சாலை விபத்துகளில் இருவர் பலி
By DIN | Published On : 18th May 2019 06:53 AM | Last Updated : 18th May 2019 06:53 AM | அ+அ அ- |

மதுரையில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த மோசஸ் காந்தி மகன் பகத்சிங் (21). இவர் கார் பழுது பார்க்கும் பணி செய்து வந்தார். கடந்த மே 5- ஆம் தேதி பகத்சிங் இரு சக்கர வாகனத்தில் எஸ்.எஸ். காலனி அருகே சர்வோதயா சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்தார். இதில் கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பகத்சிங்க்கு மருத்துவமனையில் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில், அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
இந்நிலையில், பகத்சிங் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தந்தை மோசஸ்காந்தி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன்(55), இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மதுரை - மேலூர் சாலை ஒத்தக்கடை சந்திப்பில் எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்தக் காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவுச்
செய்து விசாரித்து வருகின்றனர்.