முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சோழவந்தான், மேலூரில் காற்றுடன் மழை: வாழைகள் சேதம்
By DIN | Published On : 18th May 2019 06:51 AM | Last Updated : 18th May 2019 06:51 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிகாற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. மாவட்டத்தில் 107 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுப்பட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. மேலும் சூறாவளிக்காற்றால் வாழைத்தோப்புகளில் வாழை மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மேலும் தென்னை மரங்களும் சாய்ந்தனர். இதில் சாலைகளில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மேலூரில் மழை: மேலூர் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை சுழல் காற்றுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பல இடங்களில் மரக்கிளைகள், வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டது.