Enable Javscript for better performance
வேலம்மாள் மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பத்தில் இதய அறுவை சிகிச்சை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வேலம்மாள் மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பத்தில் இதய அறுவை சிகிச்சை

    By DIN  |   Published On : 28th May 2019 06:50 AM  |   Last Updated : 28th May 2019 06:50 AM  |  அ+அ அ-  |  

    மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இதயம் செயலிழக்க இருந்தவருக்கு நவீன தொழில்நுட்பத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
    இது தொடர்பாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை இதய நிபுணர் மருத்துவர் சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் பொன்னர்(56). இவருக்கு இதய நோய் பாதிப்பு இருந்துள்ளது.  இதயச் செயலிழப்பு அறிகுறிகளுடன் பொன்னர் வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு செய்யப்பட்ட  பரிசோதனையில், 60 முதல் 100 முறை இருதய துடிப்பு இருக்க வேண்டிய இடத்தில் 30 மட்டுமே இருந்தது. இதயம் துடிப்பதன் உந்து திறனும் வலுவிழந்து இருப்பது தெரியவந்தது. இதயத்தில் உள்ள மின்சுற்றின், மின் உற்பத்தியில் மாறுதல் ஏற்படுதலே இவரின் குறைவான இதயத் துடிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தது.
    இது போன்ற சூழலில், நிரந்தர பேஸ்மேக்கர் தான் மருத்துவர்களின் வழக்கமான பரிந்துரையாக இருக்கும். ஒரு எளிமையான பேஸ்மேக்கர் நேரடியாக இந்த பிரச்னையைச் சரி செய்யாது. ஆகையால், பிசியோலாஜிக்கல் பேஸிங் என்னும் புதிய நவீனதொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளியின் இதயத்தில் மின் உற்பத்தி செய்யும் மின் சுற்றை தூண்டினோம் . 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் இதய செயல்பாடு மேம்படுத்தப்பட்டு, அவருடைய இதயத் துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது. சிகிச்சை முடிந்த 5 ஆவது நாளிலேயே அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பொன்னர் சாதாரண வாழ்க்கை வாழலாம், தினசரி வேலைகளை செய்துக் கொள்ளமுடியும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளமுடியும் . சில கட்டுப்பாடுகளுடன் வெளியூர் பயணம் செய்யலாம் என்றார். 
    வேலம்மாள்  மருத்துவமனையின் தலைவர் ராஜா முத்தையா கூறியது: இதயத்தின் மின் உற்பத்தியை தூண்டும் "பிசியோலாஜிக்கல் பேஸிங் ' தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் ஒரு புரட்சி. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் அமெரிக்கா, சீனா போன்ற மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 50 வயதை தாண்டிய நோயாளிக்கு இதயத்தை செயல்பட வைக்கும். மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது பெருமைக்குரியது என்றார்.
    வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் கூறியது: அடுத்த சில ஆண்டுகளில் இதய அறுவை சிகிச்சை மிகவும் எளிதான சிகிச்சையாக ஆகும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இதயச் செயலிழப்பு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும். வேலம்மாள் மருத்துவமனையால் இதயத்தின் நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை, நோயாளிகளுக்கு நீண்ட நாள் வாழ்விற்கும் உறுதியளிக்கிறோம் என்றார். மேலும், இச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் சண்முக சுந்தரம், அவரது குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp