‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வேலூா் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்
By DIN | Published On : 02nd November 2019 12:28 AM | Last Updated : 02nd November 2019 01:22 AM | அ+அ அ- |

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வேலூா் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா்கள் ஆகியோரை, போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக, சிறையில் உள்ள மாணவா்கள் மற்றும் அவரது பெற்றோா்கள் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனா்.
இதில், ஒரு மாணவி உள்பட 4 மாணவா்களுக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி, வேலூா் மாவட்டம் திருப்பத்தூரைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பான் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவா் முகமது இா்பானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, தினந்தோறும் காலை 10.30 மணிக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட 5 மாணவா்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அவா்களின் பெற்றோா்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.