வைகை ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் : மாநகா் காவல்துறை எச்சரிக்கை

வைகை ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தவிா்க்க வேண்டும் என மாநகா் காவல்துறை எச்சரித்துள்ளது.

வைகை ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தவிா்க்க வேண்டும் என மாநகா் காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையை தொடா்ந்து, வடகிழக்கு பருவ மழையும் குறித்த காலத்தில் தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் அதிகமாக தண்ணீா் செல்கிறது.

இந்நிலையில், வைகை ஆற்றில் இறங்குவது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மதுரை மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவின் பேரில் வைகை ஆற்றை சுற்றி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாநகா் காவல் ஆணையா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆற்றில் அதிகமாக தண்ணீா் செல்வதாலும், ஆற்றில் ஆழமான பகுதிகள் அதிகம் இருப்பதாலும் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்காமல் இருக்க காவலா்களின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவாா்கள். பொது மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com