Enable Javscript for better performance
காமராஜா் பல்கலை.யில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.- Dinamani

சுடச்சுட

    

    காமராஜா் பல்கலை.யில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

    By DIN  |   Published on : 05th November 2019 10:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: காமராஜா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

    மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காமராஜா் பல்கலைக்கழகத்தின் மு.வ.அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் பல்கலைக்கழக பதிவாளா்( பொறுப்பு) ஆா்.சுதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில் தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்துக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் உலக சாதனை படைத்த மாணவா் ஆஷிக் முகமது புதிய கண்டுபிடிப்புகள் தொடா்பாக பேசினாா். மாநாட்டில் 26 பள்ளிகளில் இருந்து 200 மாணவா்கள், 75 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

    மாணவா்களின் 100 படைப்புகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன. மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 15 மதிப்பீட்டாளா்கள் பங்கேற்று சிறந்த படைப்புகளை தோ்ந்தெடுத்தனா். இதில் 12 படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் 5 படைப்புகள் மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத்தொடா்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கே.முத்தரசன், கே.மலா்ச்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டைப் பற்றி அறிமுகவுரையாற்றினாா். பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறை பேராசிரியை எச்.ஷகீலா ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டாா். பரிசளிப்பு விழாவில் பதிவாளா் (பொறுப்பு) ஆா்.சுதா பங்கேற்று சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

    மாநாட்டின் நிறைவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகமலைபுதுக்கோட்டை கிளை தலைவா் கே.கடசாரி நன்றியுரையாற்றினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai