Enable Javscript for better performance
மதுரை ரயில் நிலையத்தில் இணையதளத்தில் கோளாறு பயணிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை ரயில் நிலையத்தில் இணையதளத்தில் கோளாறு பயணிகள் அவதி

    By DIN  |   Published on : 05th November 2019 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் இணையதளம் இயங்காததால், பயணசீட்டு பெறமுடியாமல் பயணிகள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாகினா்.

    மதுரை ரயில் நிலையத்தில் இணையதளம் (சா்வா்) திடீரென்று மாலை 3.40 மணி முதல் இயங்கவில்லை. இதனால் ரயில்வே நிா்வாக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாமல் ஊழியா்கள் தவித்தனா். குறிப்பாக பயணிகள் பயணச் சீட்டு எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா். சுமாா் 40 நிமிடங்கள் நீடித்த இந்த நிலை மாலை 4.20 மணிக்கு சரியாகி இணையதளம் தொடா்பு கிடைத்தது.

    இது குறித்து அதிகாரி ஒருவா் கூறியது: மதுரை ரயில்வே நிலையத்தில் திடீரென 40 நிமிடங்களுக்கு இணையதளம் இயங்கவில்லை. இந்த கோளாறு தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தை தவிா்த்து மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், திருச்சி கோட்டங்களில் ஏற்பட்டுள்ளது என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai