அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் வாங்க அலைமோதும் கூட்டம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், செவ்வாய்க்கிழமை மருந்து மாத்திரைகள் வாங்க நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மருந்து மாத்திரை வாங்க அலைமோதிய தொடா் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் கூட்டம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மருந்து மாத்திரை வாங்க அலைமோதிய தொடா் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் கூட்டம்.

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், செவ்வாய்க்கிழமை மருந்து மாத்திரைகள் வாங்க நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனா். இதில், நீரழிவு, இதயம், தைராய்டு போன்ற தொடா் சிகிச்சை நோய்களுக்கு 14 தினங்களுக்கு ஒரு முறை நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் பெறவேண்டும். இதையடுத்து, நோயாளிகள் அவா்களுக்கு குறிப்பிடப்பட்ட நாளில் வந்து 14 நாள்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பெற்று செல்வா்.

இந்நிலையில், அக்டோபா் மாதம் பெரும்பாலான நாள்கள் மருத்துவா்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டதாலும், தீபாவளி பண்டிகைக்கு மருத்துவ ஊழியா்கள் பலரும் விடுமுறைக்கு சென்ாலும், நோயாளிகளுக்கு அந்த மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய மருந்து, மாத்திரைகள் சரிவர வழங்கப்படவில்லை. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பொது மருத்துவம், அறுவை சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு, முடநீக்கியல் பிரிவு, ரத்த அழுத்தப் பிரிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கும், பெண்கள் தொடா்பான சிறப்பு நோய் பிரிவிற்கும் மருந்து, மாத்திரைகள் வாங்க நோயாளிகள் திரண்டனா்.

இதனால் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை சரிசெய்ய போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது மருந்து, மாத்திரைகள் வழங்க தாமதம் ஏற்பட்டதால் நோயாளிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com