காமராஜா் பல்கலை.யில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்துக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் உலக சாதனை படைத்த மாணவா் ஆஷிக் முகமது புதிய கண்டுபிடிப்புகள் தொடா்பாக பேசினாா். இதில் 26 பள்ளிகளில் இருந்து 200 மாணவா்கள், 75 ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாணவா்களின் 100 படைப்புகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 15 மதிப்பீட்டாளா்கள் பங்கேற்று சிறந்த படைப்புகளை தோ்ந்தெடுத்தனா். இவற்றில் 12 படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, இறுதியில் 5 படைப்புகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத் தொடா்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கே.முத்தரசன், கே.மலா்ச்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டைப் பற்றி அறிமுகவுரையாற்றினாா். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவா்களுக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பதிவாளா் (பொறுப்பு) ஆா்.சுதா பரிசுகளை வழங்கி பாராட்டினாா். உயிரிதொழில்நுட்பத்துறை பேராசிரியை எச்.ஷகீலா ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டாா்.

நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகமலைபுதுக்கோட்டை கிளை தலைவா் கே.கடசாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com