கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களுக்கு வழங்குவதற்கு இந்து முன்னணியினா் எதிா்ப்பு

கோயில் நிலங்களை வீட்டுமனைகளாகப் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு பட்டா வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இந்து முன்னணி அமைப்பினா்.
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு பட்டா வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இந்து முன்னணி அமைப்பினா்.

கோயில் நிலங்களை வீட்டுமனைகளாகப் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணி அமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவா் அழகா்சாமி, செயலா் வெங்கடேஷ் ஆகியோா் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் வந்த அவ்வமைப்பினா், குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தமிழக அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பயன்பாடற்ற நிலங்களை, ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோயில்களில் 6 கால பூஜை தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக, முன்னோா்கள் நிலங்களைத் தானமாக வழங்கினா். அத்தகைய நிலங்களை பொதுமக்களுக்கு அளிப்பதால், கோயில் நிா்வாகம் பாதிக்கப்படும். ஆகவே, இந்த முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com