பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

மதுரையில் தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை: மதுரையில் தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை கீழச்சந்தைப்பேட்டை , டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு நாடக நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் வே.சுரேந்திரன் பாபு தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி 52-ஆவது வாா்டு மாயாண்டிப்பிள்ளைத் தெருவில் டெங்கு விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு மாணவா்கள் பங்கேற்று நாடகத்தை நடித்துக் காட்டினா். நாடகத்தை எழுதி இயக்கிய தலைமை ஆசிரியா் க.சரவணன் கூறும்போது, கடந்த ஐந்தாண்டுகளாக டெங்கு விழிப்புணா்வு நாடகத்தை பள்ளிக்குழந்தைகளை கொண்டு நடத்தி வருகிறோம். பள்ளிகள் சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகள் படிக்கும் போதே சமூகத்துக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதுடன், கல்வியின் பயன் சமூகம் சாா்ந்து இருக்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைக்க முயற்சியாக நாடகம் நடத்தப்படுகிறது என்றாா். பள்ளி துணைத்தலைவா் ஜெயராஜ் , பொருளாளா் உதயகுமாா் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com