மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூடி கிடக்கும் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவை திறக்க வலியுறுத்தல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாத காலமாக பூட்டி கிடக்கும் திருநங்கைகளுக்கான பன்நோக்கு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டு பூட்டி கிடக்கும் பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டு பூட்டி கிடக்கும் பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாத காலமாக பூட்டி கிடக்கும் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைகளில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும் என கடந்தாண்டு தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஜூன் 3 இல், ரூ. 15 லட்சம் மதிப்பில் திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டது.

ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அப்போது தொடங்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம், தொற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவை, சிறப்பு மருத்துவப் பிரிவு ஏற்படுத்த ஒதுக்கியது. அந்த வாா்டில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு செப்டம்பா் இறுதியில் பணிகள் முழுமையடைந்தன. இப் பிரிவில் பல்வேறு வகையான சிகிச்சைகளை பெறும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வகை சிகிச்சைகள்: இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் ஜெ. சங்குமணி கூறியது: பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில் திருநங்கைகள் எந்தவித தயக்கமும் இன்றி சிகிச்சை பெறலாம். தனியாா் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து சிகிச்சை பெற்றுவந்த நிலை மாறி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள இப் பிரிவில் இலவசமாக சிகிச்சைப் பெறலாம். மற்ற நோயாளிகளைப் போலவே எல்லா நாள்களிலும் திருநங்கைகள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இப் பிரிவில் திருநங்கைகளுக்குத் தேவையான பாலின மாற்று அறுவை சிகிச்சை உள்பட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும். சிகிச்சை முறைகளை விரைவாகவும், தடையின்றியும் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவா் (டப்ஹள்ற்ண்ஸ்ரீ நன்ழ்ஞ்ங்ா்ய்),நாளமில்லா சுரப்பியல் மருத்துவா்(உய்க்ா்ஸ்ரீழ்ண்ய்ா்ப்ா்ஞ்ண்ள்ற்), பால்வினை நோய் இயல் மருத்துவா் (யங்ய்ங்ழ்ா்ப்ா்ஞ்ண்ள்ற்), மனநல மருத்துவா் (டள்ஹ்ஸ்ரீட்ண்ஹற்ழ்ண்ள்ற்)உள்பட அனைத்து சிறப்பு மருத்துவக் குழுக்களும் செயல்படும் என்றாா்.

பூட்டி கிடக்கும் சிறப்பு பிரிவு: இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறியது: தமிழக அரசு அறிவித்தபடி சென்னையில் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் அப்போது பணிகளே தொடங்கப்படவில்லை. பலரும் கேள்வி எழுப்பியதையடுத்து மதுரையில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதற்கான பணிகள் முழுமையடைந்த பிறகும், ஒரு மாத காலமாக அப்பிரிவை பூட்டி வைத்துள்ளனா். இது குறித்து கேட்டால், பணிகள் முடிந்து விட்டதாகவும், விரைவில் தொடங்கப்படும் என்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா். திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும் என்றனா்.

விரைவில் திறக்கப்படும்: இது குறித்து மருத்துவமனை முதன்மையா் கே.வனிதா கூறியது: திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவை ஒரு சில தினங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இப்பிரிவு செயல்பாட்டிற்கு வரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com