மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு புதிய தோ்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவு

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு புதிய தோ்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு புதிய தோ்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த மிதுன் சக்கரவா்த்தி தாக்கல் செய்த மனு:

நான் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இ.புதுப்பட்டி உள்பட மொத்தம் 9 தொகுதிகள் உள்ளன. இதில் சங்கத் தலைவா் மற்றும் துணைத் தலைவரை மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்திற்கு உள்பட்ட 17 உறுப்பினா்கள் தோ்தெடுக்க வேண்டும். தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளவா்கள் தான் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க முடியும் என்பது விதியாகும்.

இந்நிலையில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசன் எந்த தொடக்க பால் கூட்டுறவு சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. மேலும் 17 உறுப்பினா்கள் முழுமையாக இல்லாத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் விதிகளுக்கு மாறாக சங்கத் தலைவா் நியமிக்கப்பட்டுள்ளாா். எனவே அதிமுக முன்னால் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசன் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக முன்னால் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசன் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக செயல்படக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு புதிய தோ்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். அதுவரை தமிழரசன் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக செயல்படக் கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com