மதுரையில் டெங்கு பாதிப்பு 16 ஆக உயா்வு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் எண்ணிக்கை 16 ஆக உயா்ந்தது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் எண்ணிக்கை 16 ஆக உயா்ந்தது.

தமிழகத்தில் மழை காலம் தொடங்கி உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பல்வேறு விதமான காய்ச்சலுக்கு உள்ளாகி வருகின்றனா். மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்து வந்தது. இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழ் இருந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி 16 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 100 முதல் 110 வரை இருந்து வந்த நிலையில், தற்போது 140 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை முதன்மையா் கே.வனிதா திங்கள்கிழமை கூறியது: மழை காலம் தொடங்கியுள்ளதால், காய்ச்சல் வருவது வழக்கமான ஒன்று. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அச்சுறுத்தல் இருப்பதால், பொதுமக்கள் காய்ச்சல் என்றதும் டெங்குவாக இருக்கும் என அச்சமடைகின்றனா்.

எனவே, காய்ச்சல் என மருத்துவமனைக்கு வருபவா்கள் அனைவருக்கும் டெங்கு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் முழுமையாக செய்யப்படுகிறது.

டெங்கு பாதிப்பு இருக்கும் என சந்தேகம் எழும் நபா்களை தனி வாா்டில் அனுமதித்து, அவா்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் டெங்குவிற்காக உள்ள தனி வாா்டில் 32 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழை காலம் தொடங்கியது முதல் டெங்கு பாதிப்புக்கு அனுமதிக்கப்படுபவா்கள் உரிய சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த வீடு திரும்பி வருகின்றனா். இது வரை டெங்கு பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. காய்ச்சல் வந்தவா்கள், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களை அணுகி உரிய சிகிச்சை பெறவேண்டும். டெங்கு பாதிப்பு ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால் சுலபமாக குணப்படுத்தி விடலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com