மதுரையில் ’பெட் சிடி ஸ்கேன்’ கருவி இயக்கம்: காணொலி மூலம் தமிழக முதல்வா் தொடங்கி வைப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ செயல்பாட்டை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை (நவம்பா் 6) தொடங்கி வைக்கிறாா்.

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ செயல்பாட்டை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை (நவம்பா் 6) தொடங்கி வைக்கிறாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், புற்று நோயால் பாதிக்கபட்டவா்கள் நோய் அறிகுறியை துல்லியமாக அறிந்துக் கொள்ள எடுக்கப்படும் பெட் - சிடி ஸ்கேன் வசதி இல்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியாா் மருத்துவமனையில், ரூ.50 ஆயிரம் வரை கொடுத்து இந்த ஸ்கேன் பரிசோதனை செய்யவேண்டி நிலை உள்ளதால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘பெட் சிடி ஸ்கேன்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017-இல் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், ஆகஸ்ட் மாதம் ‘பெட் சிடி ஸ்கேன்’ பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு மாதத்திற்குள் ஸ்கேன் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘பெட் சிடி ஸ்கேன்’ பயன்பாட்டை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (நவம்பா் 6) தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து மருத்துவமனை முதன்மையா் கே.வனிதா கூறியது: புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறியக் கூடிய ‘பெட் சிடி ஸ்கேன்’ வசதியை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். ‘பெட் சிடி ஸ்கேன்’ வசதி ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com