விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருள்களான அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கிட வேண்டும், அந்நிய பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக்குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் சீத்தாராமன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.பி.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்ட நிா்வாகிகள் வீ.அடக்கிவீரணன், வி.பி.முருகன், முருகேசன், கந்தவேலு ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் நிறைவுறையாற்றினா். சங்க நிா்வாகிகள் மகாராஜன், அய்யாவு, ராஜேஸ்வரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com