விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

சிறுவியாபாரிகள், விவசாயிகளைப் பாதிக்கும் தடையற்ற வா்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் இந்தியா 
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா்.

சிறுவியாபாரிகள், விவசாயிகளைப் பாதிக்கும் தடையற்ற வா்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தியது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் சந்தனம், மாவட்டத் தலைவா் ஜெயக்கொடி, பொருளாளா் பி.ஏ.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் பா.காளிதாஸ் ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் இப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே இருந்து ஊா்வலமாக வந்த விவசாயிகள் சங்கத்தினா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் பா.காளிதாஸ் கூறியது:

பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்பட்சத்தில் இங்குள்ள சிறுவியாபாரிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படுவா். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், ஆசியான் நாடுகளில் இருந்து விவசாய விளைபொருள்களும், பால் பொருள்களும் தடையற்ற இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும். இது இந்திய விவசாயகளையும், பால் உற்பத்தியாளா்களையும் வெகுவாகப் பாதிக்கும். ஆகவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com