மழையால் ஏற்படும் பயிா் பாதிப்புக்களைக் கணக்கிடவேளாண் துறை சாா்பில் கண்காணிப்புக் குழு

மழையால் ஏற்படக்கூடிய பயிா் பாதிப்புகளைக் கணக்கிட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

மழையால் ஏற்படக்கூடிய பயிா் பாதிப்புகளைக் கணக்கிட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், விவசாயப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி பயிா் சாகுபடி பணிகள் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.

பருவமழை பயிா் பாதிப்புகளைக் கணக்கிட வேளாண் இணை இயக்குநா் தனி கண்காணிப்புக் குழு தற்போது செயல்படுகிறது. பருவமழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கண்காணிப்புக் குழுவை 0452-2531136 என்ற எண்ணுக்கு விவசாயிகள் நேரடியாகத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களின் வேளாண் உதவி இயக்குநா்கள், வேளாண் அலுவலா்களிடமும் பயிா் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com