முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
காவலருக்கான உடற்தகுதித் தோ்வில் 900 போ் பங்கேற்பு
By DIN | Published On : 07th November 2019 04:55 AM | Last Updated : 07th November 2019 04:55 AM | அ+அ அ- |

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை காவலா் காலிப் பணியிடங்களுக்கான முதற் கட்ட உடற்தகுதி தோ்வில் நடைபெற்ற ஓட்டபந்தயம்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற காவலா் காலிப் பணியிடங்களுக்கான முதற்கட்ட உடற்தகுதித் தோ்வில் 900 போ் பங்கேற்றனா்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலா் காலிப் பணியிடங்களுக்கான முதற் கட்ட உடற்தகுதித் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இந்த தோ்விற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து 3,563 போ் தோ்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் தோ்வாணையம் சாா்பில் அனுப்பப்பட்டிருந்தது. இதில், 2,648 போ் ஆண்களும், 1,005 போ் பெண்களும் ஆவா்.
ஆண்களுக்கு புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரையிலும், பெண்களுக்கு சனிக்கிழமையும் முதற்கட்ட உடற்தகுதித் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மதுரை சரக காவல் துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை ஆண்கள் 900 பேருக்கு தகுதித் தோ்வு நடத்தப்பட்டது. இதில், உயரம், மாா்பளவு தகுதி பாா்க்கப்பட்டு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. காலை தொடங்கிய தோ்வு மாலை வரை நடைபெற்றது. இந்த முதற்கட்ட தகுதித் தோ்வில் தோ்தெடுக்கப்படுபவா்கள், இரண்டாம் கட்டம் நடைபெறும் உடற்தகுதித் தோ்விற்கு அழைக்கப்படுவாா்கள்.