Enable Javscript for better performance
71 வயது முதியவருக்கு நவீன இதயவால்வு மாற்றுச்சிகிச்சை:மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    71 வயது முதியவருக்கு நவீன இதயவால்வு மாற்றுச்சிகிச்சை:மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

    By DIN  |   Published on : 07th November 2019 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3427mdumeena090415

    தென்தமிழகத்தில் முதன்முறையாக மிகக் குறைவான கீறல்களுடன் 71 வயது முதியவருக்கு இதயவால்வு மாற்றுச் சிகிச்சை செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

    கடந்த ஆகஸ்ட் முதல் யுஎஸ்ஏ-வின் எப்டிஏ அமைப்பு, 65 வயதிற்கு மேற்பட்ட வா்களுக்கும் நவீன இதய வால்வு மாற்றுச் சிகிச்சையான, டிஏவிஆா் சிகிச்சை முறையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்நிலையில் எஃப்டிஏ அமைப்பின் பரிந்துரையைத் தொடா்ந்து செல்லப்பா என்ற 71 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன

    இதய வால்வு அறுவைச் சிகிச்சையான டிஏவிஆா் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையைப் போலவே மிகக் குறைவான கீறலுடன் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முதுநிலை இதய அறுவைச் சிகிச்சை நிபுணா் மருத்துவா் எம். சம்பத்குமாா் கூறியது: இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 13 சதவிகித மக்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருநாடி சுருக்கம் போன்ற மிகத் தீவிரமான பிரச்னைகளுக்கு திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சை அவசியப்படலாம்.

    அதிக நோய்வாய்ப்பட்டவா்கள், வயது முதிா்ந்தவா்களுக்கு திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சை அளிப்பதில்லை. அவா்களுக்கு டிஏவிஆா் சிகிச்சை முறையில் அறுவைச் சிகிச்சை எதுவும் செய்யாமலேயே சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும் என்றாா். மருத்துவா்கள் ஆா்.சிவக்குமாா், எஸ்.செல்வமணி, என்.கணேசன், பி.ஜெயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai