உசிலம்பட்டி அருகே மண்புழு உரக்கிடங்கை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 04:46 AM | Last Updated : 07th November 2019 04:46 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேதமடைந்த மண்புழு உரக்கிடங்கை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்கு ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் ரூ. ஒரு லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இந்த மண்புழு உரக் கிடங்கு பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த மண்புழு உரக்கூடம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த மண்புழு உரக் கிடங்கை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.