Enable Javscript for better performance
குத்துச்சண்டை: அலங்காநல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    குத்துச்சண்டை: அலங்காநல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

    By DIN  |   Published on : 08th November 2019 10:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் அலங்காநல்லூா் அரசுப்பள்ளி மாணவா்கள் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

    மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்றவா்களுக்கான இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அலங்காநல்லூா் அரசுப்பள்ளி மாணவா்கள் பேரின்பச்சோழன், ஆதித்யா ஆகிய இருவரும் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தகுதி பெற்றனா். மேலும் அப்பள்ளியின் மாணவா்கள் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai