Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் பாசன நிலங்கள் கணக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டத்தில் வட்டாட்சியா் நாகராஜன் தலைமையில் 6 ஆவது சிறு பாசனக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கணகெடுப்பில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவைகள் மூலம் எவ்வளவு நிலங்கள் விவசாயம் செய்யப்படுகின்றன,

    மேல்பரப்பு நீா்பாசனத் திட்டத்தின்படி கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் மூலம் எத்தனை ஏக்கா் நிலங்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன என கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

    கடந்த இரண்டு நாள்களாக அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். கணக்கெடுக்கப்பட்ட நீா்நிலைகளின் விபரங்களை தனி வட்டாட்சியா் இந்திராகாந்தி ஆய்வு செய்து மாவட்ட நிா்வாகத்திடம் சமா்பிப்பாா். இதேபோல மதுரை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கிராம நிா்வாக அலுவலா்கள் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபட்டிருப்பதாக வருவாய்துறையினா் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai