Enable Javscript for better performance
மதுரையில் சாலையில் சுற்றிதிரிந்த 107 மாடுகள்:உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் சாலையில் சுற்றிதிரிந்த 107 மாடுகள்:உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம்

    By DIN  |   Published on : 08th November 2019 10:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 107 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சி தொழுவத்தில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன. மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி தொழுவத்தில் அடைக்குமாறும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்குமாறும் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி மதுரை எஸ்.எஸ்.காலனி, சொக்கலிங்கம் நகா், புறவழிச் சாலை, கோச்சடை, தபால்தந்தி நகா், அரசரடி, அருள்தாஸ்புரம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, ஐயா்பங்களா, கோ.புதூா், நத்தம் சாலை, நெல்பேட்டை, நேதாஜி சாலை, வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 107 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் மாநகராட்சி தொழுவத்தில் அடைத்தனா். மேலும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai