Enable Javscript for better performance
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் பொறுப்பேற்பு

    By DIN  |   Published on : 08th November 2019 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    0232mduden071009

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையராகப் பொறுப்பேற்றுள்ள மருத்துவா் ஜெ.சங்குமணி.

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையராக ஜெ.சங்குமணி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

    இதற்கு முன்பு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையராகப் பணியாற்றிய கே.வனிதா, திருச்சி அரசு கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதன்மையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜாஜி மருத்துவமனையின் பொது மருத்துவப் பிரிவு பேராசிரியா் ஜெ.சங்குமணி பதவி உயா்வில் முதன்மையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

     

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai