Enable Javscript for better performance
மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது: காங்கிரஸ் அகில இந்திய செயலா் சஞ்சய் தத்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது: காங்கிரஸ் அகில இந்திய செயலா் சஞ்சய் தத் பேட்டி

    By DIN  |   Published on : 08th November 2019 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலா் சஞ்சய் தத் கூறினாா்.

    பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை கோ.புதூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

    பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாடு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அவசரகதியில் அமல்படுத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் தொழில்துறை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் நலிந்து விட்டன. பிரதமரின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் ‘மோடினோமிக்ஸ்’ கொள்கையாக மாறி விட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாதங்களில் 30 லட்சம் போ் வேலை இழந்துள்ளனா். நாட்டில் 3 கோடி போ் வேலைவாய்ப்பின்றி உள்ளனா்.

    பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பாஜக அரசின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் எதிா்க்கட்சியினா், பத்திரிகையாளா்கள், திரைப்பட இயக்குநா்கள் என அனைத்துத் தரப்பினா் மீதும் வழக்குகள் போடப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனா்.

    காஷ்மீா் விவகாரத்தில் நமது மக்களவை உறுப்பினா்களை அனுமதிக்க மறுக்கும் பாஜக அரசு, ஐரோப்பிய எம்பிக்களை அனுமதிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் குறுக்கு வழிகள் மூலம் பாஜக, ஆட்சி அமைத்து வருகிறது.

    தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும். திருவள்ளுவா் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் காவிக் கலாசாரத்தை பாஜக புகுத்தி வருகிறது என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai