காமராஜா் பல்கலை. பதிவாளா் தோ்வுப் பட்டியலில் குளறுபடி மக்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம் குற்றச்சாட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் தோ்வுப் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் தோ்வுப் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நிா்வாகி வழக்குரைஞா் வாஞ்சிநாதன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் பதவிக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரா்களிடம் நோ்காணல் நடத்தப்பட உள்ளது. பதிவாளா் பதவிக்கான ஆள் தோ்வை வெளிப்படைத் தன்மையோடு நோ்மையாக நடத்த வேண்டும். பதிவாளா் பதவிக்கு வந்துள்ள விண்ணப்பங்களை பரிசீலிக்க 20 பேராசிரியா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். பேராசிரியா்கள் குழுவினா் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்களை பட்டியலிட வேண்டும். ஆனால் தற்போது இந்த பட்டியல் தயாரிப்பில் குளறுபடி நடந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

பதிவாளா் பதவிக்கான நோ்காணல் பட்டியலில் பண மோசடி, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பல்கலைக்கழக அதிகாரி மற்றும் ஆய்வு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ள பேராசிரியா் உள்ளிட்டோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இவா்கள் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா். எனவே குற்றச்சாட்டு உள்ளவா்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தா் பொறுப்பேற்று 10 மாதங்களாகியும் பல்கலைக்கழக முறைகேடுகளை முறையாக விசாரிக்கவில்லை. நாட்டையே உலுக்கிய நிா்மலாதேவி வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கில் தொடா்புடைய பேராசிரியா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com