காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் 6 மாதங்கள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்

மதுரை மாவட்டத்தில் காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோருக்கு

மதுரை மாவட்டத்தில் காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோருக்கு 6 மாதங்கள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாவட்ட நியமன உணவுக் கட்டுப்பாட்டு அலுவலா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

மதுரை முனிச்சாலையில் இதயதுல்லா என்பவரின் மிட்டாய் கடையில் இருந்து 2 டன் அளவிலான ரூ.20 லட்சம் மதிப்பிலான காலாவதியான மிட்டாய்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நவம்பா் 1 ஆம் தேதி பறிமுதல் செய்தனா். இதையடுத்து மதுரை மாவட்ட உணவுப் பாதுக்காப்புத் துறை அலுவலா்களால் கடந்த 6 நாள்களில் மதுரையில் 12 கடைகளில் இருந்து 79 மிட்டாய் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு சோதனைக்காக அனுப்பட்டன. அதற்கான முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. அந்த முடிவில் பரிசோதனைக்கு அனுப்பட்ட 79 மிட்டாய்களில் 20 மிட்டாய் மட்டுமே குழந்தைகள் சாப்பிடுவதற்கு உகந்தது எனத் தெரியவந்தது.

இதையடுத்து மதுரை மாவட்ட நியமன உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சோமசுந்தரம் தலைமையில், மாவட்ட மிட்டாய், பிஸ்கட் சிறுதொழில் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கு விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

அதில் மதுரையில் இருந்து காலாவதியான உணவுப் பொருள்கள் ஆயிரம் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அந்தக் கடைகள் அனைத்தும் பள்ளிக் கூடங்கள் அருகே அமைந்துள்ளன. இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே காலாவதியான தரமற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் தற்போது கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளை வைத்து கடை உரிமையாளா்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com