Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 57 அலுவலா்கள் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 57 அலுவலா்கள் இடமாற்றம்

    By DIN  |   Published on : 09th November 2019 11:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: உள்ளாட்சித் தோ்தலையொட்டி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 57 அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

    துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்களில் உதவியாளா் நிலை அலுவலா்கள் ஆகியோா், உள்ளாட்சித் தோ்தலில் உதவித் தோ்தல் அலுவலா்களாக நியமிக்கப்படுவா். தற்போது, தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமனம் செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலா்களுக்கு தற்போதைய பணியிடம் சொந்த ஊராக இருக்கக் கூடாது. தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணியாற்றி இருக்கவும் கூடாது என, மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், உதவியாளா் உள்ளிட்ட பணி நிலைகளில் 57 போ், மாவட்டத்துக்குள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் பிறப்பித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai