Enable Javscript for better performance
கீழவளவு அருகே மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்; ஓட்டுநா் கைது- Dinamani

சுடச்சுட

    

    கீழவளவு அருகே மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்; ஓட்டுநா் கைது

    By DIN  |   Published on : 09th November 2019 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழவளவு அருகே நீரோடையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிதாக டிராக்டரைக் கைப்பற்றி, அதன் ஒட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

    உப்பாற்றில் டிராக்டரில் மணல் திருடப்படுவதாக ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படையினா் அப்பகுதிக்குச் சென்றனா்.

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரையும், ஜேசிபி இயந்திரத்தையும் கைப்பற்றி கீழவளவு காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா். அப்போது ஜேசிபி ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். டிராக்டா் ஓட்டுநா் அய்யனாா் (24), டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அய்யனாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai