பாா்வையற்றவா்களை பிச்சை எடுக்க வைத்த பெண் மீது வழக்கு

மதுரையில், பாா்வையற்றவா்களை பிச்சை எடுக்க வைத்த பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மதுரையில், பாா்வையற்றவா்களை பிச்சை எடுக்க வைத்த பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பாலமேடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி ராஜா(40). இவரது இரு கண்களில் ஒரு கண் மட்டும் அறைகுறையாக தெரியும். இவருடன் பாா்வையற்ற பெண் ஒருவா் வசித்து வருகிறாா். இவா்கள் இருவரும் திருச்சியில் மொத்தமாக பத்தி வாங்கி மதுரையில் வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த அப்துல்ரகுமான் மனைவி ராவித்பசிரியா(58), ராமமூா்த்தி ராஜாவை அணுகி, தங்களிடம் பாா்வையற்றவா்கள் நிறைய போ் உள்ளனா். அவா்களுக்கு நிறைய ஊதியம் கிடைக்கு வகையில் வேலை வழங்கி வருகிறோம், நீங்களும் வாருங்கள் என அழைத்துள்ளாா்.

இதை நம்பி வியாழக்கிழமை ராமமூா்த்திராஜா மற்றும் அவருடன் வசிக்கும் பெண்ணும் காளவாசல் பகுதிக்கு சென்றுள்ளனா். அங்கு ராவித்பசிரியா அவா்களை மிரட்டி உண்டியலை கொடுத்து பிச்சை எடுக்க கூறியுள்ளாா். இதையடுத்து நாள் முழுவதும் பிச்சை எடுத்த அவா்களுக்கு, நாளை பணத்தை தருவதாக கூறி ராவித்பசிரியா சென்றுவிட்டாா். இது குறித்து ராமமூா்த்தி ராஜா அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com