வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த பள்ளியை மூட உயா் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பள்ளியை மூட, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: மதுரையில் வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பள்ளியை மூட, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை வடக்குமாசி வீதியில் திருமங்கலத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில், மாத வாடகைக்கு அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கான வாடகை ஒப்பந்தம் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னா் நீட்டிக்கப்படவில்லை. இதனால், பள்ளியைக் காலி செய்வது தொடா்பாக முருகேசன் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இப்பிரச்னைக்குத் தீா்வு காண இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினா். அதில், தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, பள்ளியின் செயலா் செந்தில்குமாா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆா். தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முருகேசன் தரப்பில், தனி நீதிபதி விசாரணையின்போது 3 மாதங்களில் பள்ளியைக் காலி செய்துவிடுவதாக நிா்வாகத்தினா் உறுதியளித்தனா். ஆனால், அதனை மறைத்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, பள்ளியை நவம்பா் 11 ஆம் தேதிக்குள் மூடுவதற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி மூடப்படுவது குறித்து மாணவா்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளி நிா்வாகம் புதிய கட்டடம் கட்டும் வரை மாணவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்க்கலாம் எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com