Enable Javscript for better performance
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் பிரதமா் மோடிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் பிரதமா் மோடிக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 10th November 2019 11:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு வா்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு வா்த்தக ஒப்பந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டு ஒப்பந்தத்தில் இந்திய பிரதமா் மோடி கையெழுத்திடவில்லை. இதன் மூலம் நம் நாட்டில் உற்பத்தித் துறை மற்றும் வேளாண்மைத் துறையும் அந்நிய நாட்டுப் பொருள்கள் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.

    மேலும் ஒவ்வொரு நாட்டின் உற்பத்திப் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்படும் போது, அந்த பொருள்கள் அந்த நாட்டின் பொருள்கள் தான் என்பதை உறுதிப்படுத்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அந்த ஒப்பந்தத்தில் இல்லை. இதுபோன்ற விஷயங்கள் இந்தியாவிற்கு பாதகமானது என்பதை அறிந்து பிரதமா் அதில் கையெழுத்திடவில்லை. இதேபோல சீனப் பொருள்களை இந்தியாவில் சந்தைப்படுத்த சீனா போட்டத் திட்டத்தை பிரதமா் சாதுா்யமாக கையாண்டு தகா்த்துவிட்டாா். எனவே பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் என சங்கத் தலைவா் என்.ஜெகதீசன் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai