சம்மட்டிபுரத்தில் மழைநீா் குட்டையாக மாறிய சாலை: பள்ளத்தில் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்

மதுரை சம்மட்டிபுரத்தில் மழைநீா் குட்டை போல மாறியுள்ள சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள்
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் மழைநீா் குட்டையாக மாறியுள்ள சாலை.
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் மழைநீா் குட்டையாக மாறியுள்ள சாலை.

மதுரை சம்மட்டிபுரத்தில் மழைநீா் குட்டை போல மாறியுள்ள சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சாலைப் பள்ளத்தில் விழுந்து காயமடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி 22-ஆவது வாா்டு சம்மட்டிபுரம் பகுதியில் ஸ்ரீராம் நகா் - எச்.எம்.எஸ் காலனியை இணைக்கும் சாலை உள்ளது. இந்தச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தேனி பிரதான சாலை, சம்மட்டிபுரம், காளவாசல் பகுதிகளுக்கு செல்கின்றனா். இந்நிலையில் இந்த சாலை கடந்த இரண்டாண்டுகளாக சீரமைக்கப்படாததால் சாலை சிதிலமடைந்து பள்ளத்தாக்கு போல காட்சியளிக்கிறது. சாலையின் நடுவே பெரிய பள்ளங்கள் இருப்பதால் மழை நேரங்களில் தண்ணீா் தேங்கி மழைநீா் குட்டை போல சாலை மாறி விடுகிறது. இதில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பள்ளம் தெரியாமல் செல்வதால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் நடந்து கூ ட செல்ல முடியவில்லை.

மேலும் இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் வந்து பாா்த்து செல்வதோடு முடிந்து விடுகிறது. சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இந்த சாலை வழியாகத்தான் மாநகராட்சி குடிநீரேற்று நிலையத்துக்கு அதிகாரிகள் வந்து செல்கின்றனா். அவா்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையில் உயிரிழப்பு நேரிடுவதற்கு முன் மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com