மேனேந்தல் பகுதியில்நுண்ணுயிா் உரக்கூடம் திறப்பு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரக் கூடத்தை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சனிக்கிழமை திறந்து வைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரக் கூடத்தை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை எளிதாக்கும் வகையில், மதுரை மாநகராட்சி வாா்டுகளில் வீடுவீடாகச் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளிலிருந்து அந்தந்தப் பகுதிகளிலேயே உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டத்தில், மொத்தம் 41 உரக்கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 25 இடங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், தத்தனேரியில் முதலாவது உரக்கூடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, திருப்பாலையை அடுத்த மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உரக் கூடத்தை, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி. ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), பி. மூா்த்தி (மதுரை கிழக்கு), நகரப் பொறியாளா் அரசு, உதவி ஆணையா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com