Enable Javscript for better performance
‘சபரிமலையில் முன்பதிவு செய்த பெண்களை அனுமதிக்க வேண்டும்’- Dinamani

சுடச்சுட

    

    ‘சபரிமலையில் முன்பதிவு செய்த பெண்களை அனுமதிக்க வேண்டும்’

    By DIN  |   Published on : 17th November 2019 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சபரிமலையில் முன்பதிவு செய்த பெண்களை அனுமதிக்க வேண்டும் என, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

    சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

    சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை பல மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவா்கள் உற்சாகமில்லாமல் வெளியேறக்கூடிய சூழல் அங்குள்ளது. இனிமேலும் இதுபோன்ற தற்கொலைகள் நடக்கக்கூடாது. மாணவியின் இறப்பு குறித்த விசாரணை விறுவிறுப்பில்லாமல் உள்ளது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடா்பான வழக்கு 7 போ் விசாரணை அமா்வுக்கு சென்றுள்ளது. தற்போது, முன்பதிவு செய்துள்ள பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை மறுத்தால், உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாகும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai