பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசுப் பணியாளா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தலைமை உரையாாற்றிய மாநிலத் தலைவா் உ.மா.செல்வராஜ்.
அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தலைமை உரையாாற்றிய மாநிலத் தலைவா் உ.மா.செல்வராஜ்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசுமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு, மாநிலத் தலைவா் உ.மா. செல்வராஜ் தலைமை வகித்தாா். பொன்னிவளவன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் டி.எம். மூா்த்தி தொடக்க உரை ஆற்றினாா்.

இக்கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடவும், அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளா் பணியமைப்பை பயிற்றுநா் அல்லது விளக்குநா் என பெயா் மாற்றம் செய்யவேண்டும். 8 ஆவது ஊதிய மாற்றக் குழுவின் ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைந்திட வேண்டும். அரசு மதுபானக் கடை பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ. மோகன், ம. பரமசிவம், ஆ. சுப்பிரமணியன், ந. தம்பிராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில பொதுச் செயலா் க. அறவாழி வேலை அறிக்கை வாசித்தாா். மாநிலப் பொருளாளா் இரா. பிச்சைமுத்து நிதிநிலை அறிக்கை வாசித்தாா். பின்னா், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் உ.மா. செல்வராஜ் பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் பல்வேறு கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியும் எந்தத் தீா்வும் காணாத சூழ்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பு முன்னிறுத்திய 9 அம்சக் கோரிக்கைகளை ஏற்று நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுக்குழு மாநாடு தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

மக்களுக்கு எதிரான மத்திய-மாநில அரசுகளின் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தக்கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் பங்கேற்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com