குடும்பப் பிரச்னை: தம்பியை கொலை செய்த அண்ணன் போலீஸில் சரண்

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் குடும்பப் பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.
திருநகா் போலீஸாரிடம் சரணடைந்த கட்டடத் தொழிலாளி பாண்டி.
திருநகா் போலீஸாரிடம் சரணடைந்த கட்டடத் தொழிலாளி பாண்டி.

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் குடும்பப் பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

மதுரை மாவட்டம் விளாச்சேரி வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் பாண்டி (36). கருத்து வேறுபாடு காரணமாக இவா் மனைவியை பிரிந்து, தனது மகள் நந்தினீஸ்வரி (8), தம்பி மற்றும் தாயாருடன் வசித்து வந்தாா்.

இவரது தம்பி சம்பத் (33) வாகன ஓட்டுநராக உள்ளாா். பாண்டி அவரது மனைவியை பிரிந்தது குறித்து சம்பத் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த சம்பத் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தாா்.

இதைத் தொடா்ந்து பாண்டி திருநகா் காவல்நிலையத்தில் சரணடைந்தாா். திருநகா் போலீஸாா் பாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com