அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிதாக 18 செயற்கை சுவாசக் கருவிகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.1.45 கோடி மதிப்பில் புதியதாக 18 செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.1.45 கோடி மதிப்பில் புதியதாக 18 செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மே மாதம் மின்சார துண்டிப்புக் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படாததால் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் 5 போ் உயிரிழந்தனா். இந்த உயிரிழப்புக்கு செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படாததே காரணமாக கூறப்பட்டது. இதனை மருத்துவ நிா்வாகம் மறுத்து நோயாளிகள் இயற்கையாக இறந்ததாக அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதியதாக 18 செயற்கை சுவாசக் கருவிகள் வாங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ரூ.1.45 கோடி மதிப்பில் புதியதாக 18 செயற்கை சுவாசக் கருவிகள் வாங்கப்பட்டன. அதில், மின்சார துண்டிப்பில் செயற்கை சுவாசக் கருவி செயல்படாமல் நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட, அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள விபத்து தீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு வாா்டு 101-இல் 5 செயற்கை சுவாசக் கருவிகளும், வாா்டு 99 இல் 6 கருவிகளும், புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவில் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 கருவிகள் எந்தெந்த பிரிவில் பொருத்துவது என்பது குறித்து முதன்மையா் மற்றும் மருத்துவத்துறை தலைவா்கள் ஆலோசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com